< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு - ஐ.நா. எச்சரிக்கை
|11 April 2024 11:00 PM IST
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
கடும் வெப்ப அலை காரணமாக கிழக்கு ஆசிய நாடுகளில் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 24 கோடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளிலும், பள்ளிகளிலும் குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்கவும், கோடை காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது.