< Back
உலக செய்திகள்

image courtesy: AFP
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கனமழையால் வீடுகள் இடிந்து 22 பேர் உயிரிழப்பு

24 July 2023 5:34 AM IST
கிழக்கு ஆப்கானிஸ்தானில் வார்டாக் மாகாணத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன.
காபூல்,
கிழக்கு ஆப்கானிஸ்தானில் வார்டாக் மாகாணத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் அங்குள்ள ஜல்ரேஸ், சாக், ஜகாதோ உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு வீடுகள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பலர் மாயமாகி உள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.