< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ; 21 பேர் உடல் கருகி பலி
|19 April 2023 12:26 AM IST
சீனாவில் ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் உடல் கருகி பலியாகினர்.
பீஜிங்,
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள பெங்டாய் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் இந்த ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதிலும் பரவியது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதனையடுத்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர்.
எனினும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 21 பேர் உடல் கருகி பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.