< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மூளையை தின்னும் அமீபா – அமெரிக்காவில் 2 வயது சிறுவன் பலி..!
|22 July 2023 1:06 PM IST
மூளையை தின்னும் அமீபா என்ற நோயினால் அமெரிக்காவில் 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் 2 வயது சிறுவனின் மூளையை அமீபா என்ற நோய் தாக்கியது. இந்த நோய் பாதிப்பால் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இது தொடர்பாக சிறுவனது தாய் கூறுகையில், கடந்த ஏழு நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நீர்நிலைகளில் வாழும் அமீபா மூலம் இந்த மூளையை தின்னும் அரியவகை அமீபா என்ற நோய் பரவுகிறது. இது நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை தாக்கும். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.