< Back
உலக செய்திகள்
கொலம்பியாவில் சவுரி முடிக்குள் ஒளித்து வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சி - 2 பெண்கள் கைது
உலக செய்திகள்

கொலம்பியாவில் சவுரி முடிக்குள் ஒளித்து வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சி - 2 பெண்கள் கைது

தினத்தந்தி
|
13 Nov 2022 6:30 AM IST

சவுரி முடிக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்த முயன்ற பெண்கள் விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பொலிவியாவில் அரங்கேறியுள்ளது.

பொகோட்டா,

விமான நிலையங்களில் போதைப் பொருள், தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்த முயற்சி செய்யும் நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தாலும், கடத்தலில் ஈடுபடுவோர் தங்கள் வேலையை செய்து முடிக்க புதுப்புது யுக்திகளை பயன்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில் தலையில் மாட்டிக்கொள்ளும் சவுரி முடிக்குள் சுமார் 2 கிலோ எடையுள்ள கொகைன் போதைப் பொருளை 2 பெண்கள் கடத்த முயன்ற போது விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பொலிவியாவில் அரங்கேறியுள்ளது.

இருவேறு விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த பெண்கள் தங்கள் தலையில் வைத்திருந்த சவுரி முடிக்குள் மாத்திரை வடிவில் போதைப் பொருளை ஒளித்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்