நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்
|நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
காத்மண்டு,
நேபாள நாட்டில் மவுண்ட் மனாஸ்லு என்ற மலை பகுதியில் மலையேற்ற வீரர்கள் சிலர் மலையேறும்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். அதிக உயரம் கொண்ட பகுதியில் நடந்த இந்த பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டறியும் மற்றும் மீட்பு பணிக்காக வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதத்தில், மவுண்ட் மனாஸ்லுவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட வீரர்களில் பலர் பனிச்சரிவில் சிக்கி கொண்டனர்.
அவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த 10 பேர் காத்மண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 பேர் காணாமல் போனார்கள். உயிரிழந்தவர்களில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர்.