< Back
உலக செய்திகள்
2 இலங்கை மந்திரிகள் இடைநீக்கம்: சுதந்திரா கட்சி நடவடிக்கை
உலக செய்திகள்

2 இலங்கை மந்திரிகள் இடைநீக்கம்: சுதந்திரா கட்சி நடவடிக்கை

தினத்தந்தி
|
23 Nov 2022 5:39 AM IST

மத்திய குழுவின் முடிவை மீறி ஆட்சியில் இடம்பெற்றதால், 2 மந்திரிகள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சுதந்திரா கட்சி கூறியுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசில் சிவில் விமான போக்குவரத்து மந்திரியாக இருப்பவர் நிமல் சிறிபாலா டி சில்வா. வேளாண் மந்திரியாக இருப்பர் மகிந்த அமரவீரா. இவர்கள் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களும், அதே கட்சியில் உள்ள 3 இளநிலை மந்திரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆட்சியில் பங்கேற்பது இல்லை என்ற மத்திய குழுவின் முடிவை மீறி ஆட்சியில் இடம்பெற்றதால், விளக்கத்துக்கு பதில் அளிக்கும்வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சுதந்திரா கட்சி கூறியுள்ளது. இருப்பினும், அவர்கள் மந்திரிசபையில் இருந்து நீக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்