< Back
உலக செய்திகள்
கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது

கோப்புப்படம்

உலக செய்திகள்

கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
29 July 2022 2:48 AM IST

கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

டொராண்டோ,

ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டது, கனடா வரலாற்றின் கருப்பு அத்தியாயம் ஆகும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையானவர், சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் ஆவார்.

இவர் கடந்த 14-ந் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் டானர் பாக்ஸ் (வயது 21), ஜோஸ் லோபஸ் (23) ஆவார்கள். ஆனால் இந்தக் கொலையின் பின்னணி என்ன என்பது இன்னும் தெரிய வரவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்