< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி
|9 May 2023 12:30 AM IST
பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் கபால் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேனில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.