< Back
உலக செய்திகள்
அமெரிக்கா: சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

அமெரிக்கா: சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
2 Aug 2023 1:41 AM IST

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போயிங் தீயணைப்புத் துறை மற்றும் கிங் கவுண்டி தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்களும் பதிலளித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்