< Back
உலக செய்திகள்
மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 10 பேர் பலி
உலக செய்திகள்

மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 10 பேர் பலி

தினத்தந்தி
|
23 April 2024 10:11 AM IST

மலேசியாவில் கடற்படை தினத்தின் ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

மலாய்,

மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு நிகழ்ச்சிகாக நடந்த ஒத்திகையின்போது 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த ஒத்திகையின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்