< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

தினத்தந்தி
|
27 Aug 2022 12:26 AM IST

அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அலறியபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். எனினும் மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 2 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஆதரவற்றோர் இல்லத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து கொலையாளியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்