< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் நிலக்கரி சுரங்க கம்பெனி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து- 26 பேர் பலி
|16 Nov 2023 11:48 AM IST
இரண்டாவது தளத்தில் பற்றிய தீ, மளமளவென பரவியதால் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
பீஜிங்:
சீனாவின் ஷான்ஜி மாகாணம், லியூலியாங் நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க கம்பெனி அலுவலகம் உள்ளது. 5 தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில் வழக்கம்போல் பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2வது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் தீப்பற்றிய பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். சுமார் 60 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.