< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிரியாவில் பயங்கர குண்டுவெடிப்பு; 18 ராணுவ வீரர்கள் பலி
|13 Oct 2022 10:03 PM IST
சிரியா குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்தநிலையில் அங்கு ராணுவ வீரர்களை குறிவைத்து, அவர்களது பஸ் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கடந்த மார்ச் மாதம் பால்மிரா என்ற இடத்தில் ராணுவ பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டதும், 18 பேர் படுகாயம் அடைந்ததும் நினைவுகூரத்தக்கது.
இந்த தாக்குதல்களை ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தி வருவதாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.