< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான்; பஸ் தீப்பற்றி எரிந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 18 பேர் தீயில் கருகி பலி
உலக செய்திகள்

பாகிஸ்தான்; பஸ் தீப்பற்றி எரிந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 18 பேர் தீயில் கருகி பலி

தினத்தந்தி
|
20 Aug 2023 2:20 PM IST

பாகிஸ்தானில் பஸ்-வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர்.

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி வழக்கம்போல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, 40 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே எரிபொருள் ஏற்றி வந்த வேனின் மீது பயங்கரமாக மோதியது.

மோதியதில் பஸ் மற்றும் வேன் தீப்பற்றி எரிந்தன. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட18 பேர் தீயில் கருகி பலியாகினர். படுகாயமடைந்த 16 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சுதாரித்து கொண்டு பஸ்சில் இருந்து குதித்தவர்கள் மட்டும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். பஸ் வேகமாக இயக்கப்பட்டதா? அல்லது டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தில் பஸ் மற்றும் வேன் டிரைவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

மேலும் செய்திகள்