< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மெக்சிகோவில் கடத்தப்பட்ட 16 போலீசார் மீட்பு
|1 July 2023 10:32 PM IST
மெக்சிகோவில் கடத்தப்பட்ட 16 போலீசார் மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணம் ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் போலீசார் வாகனத்தில் சென்றனர். அப்போது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தை வழி மறித்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் வாகனத்தில் இருந்த 16 போலீஸ்காரர்களையும் சிறை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடத்தப்பட்ட போலீஸ்காரர்களை மீட்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் சியாபாசின் நெடுஞ்சாலை அருகே 16 போலீஸ்காரர்களும் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.