< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பப்புவா நியூ கினியா: இரு நகரங்களில் ஏற்பட்ட கலவரத்தில் 15 பேர் பலி
|11 Jan 2024 9:33 AM IST
தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மோர்ஸ்பி,
பப்புவா நியூ கினியா நாட்டின் 2 பெரிய நகரங்களாக போர்ட் மோர்ஸ்பி மற்றும் லே ஆகியவை உள்ளது. இந்த 2 நகரங்களில் நேற்று திடீரென கலவரம் வெடித்தது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை நடந்த கலவரத்தில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், லே நகரில் 7 பேர் உயிரிழந்ததாகவும் பப்புவா நியூ கினியா காவல்துறை ஆணையர் டேவிட் மானிங் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.