< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் அறுந்து விபத்து - 15 பேர் படுகாயம்
|22 April 2024 2:08 AM IST
அமெரிக்காவில் கேளிக்கை பூங்கா ஒன்றில் ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. வார விடுமுறையை முன்னிட்டு சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் அங்கு சென்றிருந்தனர். அப்போது அதில் உள்ள ஒரு ராட்டினம் திடீரென அறுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த கேளிக்கை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.