< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
துருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் ராஜினாமா
|16 Sept 2023 10:21 PM IST
துருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கியில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு மந்திரி பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் அவர்கள்அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் அங்கு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது துருக்கி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.