< Back
உலக செய்திகள்
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

கோப்புப்படம் 

உலக செய்திகள்

உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

தினத்தந்தி
|
21 July 2022 7:05 AM IST

ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மைநோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப் பட்டு உள்ளது.

இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்