< Back
உலக செய்திகள்
மெக்சிகோ: பஸ் கவிழ்ந்து விபத்து - 14 பேர் பலி
உலக செய்திகள்

மெக்சிகோ: பஸ் கவிழ்ந்து விபத்து - 14 பேர் பலி

தினத்தந்தி
|
29 April 2024 6:47 AM GMT

மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ் டி லா பெஸ் நகரில் இருந்து மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மனிநல்கோ நகருக்கு நேற்று சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

கெப்லுன் - ஷல்பா நகர் இடையேயான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 31 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்