< Back
உலக செய்திகள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

Image Courtesy : @IndiainSL

உலக செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

தினத்தந்தி
|
16 Aug 2024 7:24 PM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கொழும்பு,

இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள், தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்கள், கடந்த புதன்கிழமை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதற்கு முன்பு, இந்த மாத தொடக்கத்தில் 21 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்