< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிலியில் பயங்கர காட்டுத்தீ - 13 பேர் பலி
|4 Feb 2023 8:29 AM IST
சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழந்தனர்.
சண்டியாகோ,
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும் இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.