< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பானில் ஒரு வாரத்தில் 1,200 முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
|9 Jan 2024 5:41 AM IST
ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால், அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.
டோக்கியோ,
ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புபடையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் வலுவான பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1,214 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதனால் மேலும் பல நிலநடுக்கம் ஏற்படலாம் என மக்கள் பீதியில் உள்ளனர்.