< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நேபாளத்தில் புனித யாத்திரை சென்றபோது கார் விபத்து - இந்திய பக்தர்கள் 12 பேர் காயம்
|25 Oct 2023 2:24 AM IST
நேபாளத்தில் புனித யாத்திரை சென்றபோது ஏற்பட்ட கார் விபத்த்தில் இந்திய பக்தர்கள் 12 பேர் காயமடைந்தனர்.
காத்மாண்டு,
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட பக்தர்கள் குழு நேபாளம் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் பிர்குஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
மகாவன்பூர் மாவட்டம் மாடதீர்த்தா பகுதி அருகே வரும்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 குழந்தைகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காத்மாண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் கார் டிரைவர் அனில்குமார் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.