< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஹாங்காங் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து 11 பயணிகள் காயம்
|24 Jun 2023 10:40 PM IST
ஹாங்காங் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து 11 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு கேத்தே பசிபிக் நிறுவன விமானம் புறப்பட்டது. இதில் 17 விமான ஊழியர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
ஓடுதளத்தில் சென்றபோது விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் விமானம் குலுங்கியதில் பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. எனவே புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தின் அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்துக்கு கேத்தே விமான நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியது.