< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜார்ஜியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
|5 Aug 2023 3:10 PM IST
ஜார்ஜியாவில் உள்ள ஷோவி மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
ஜார்ஜியா,
ஜார்ஜியாவில் உள்ள ஷோவி மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மினரல் வாட்டருக்கு பெயர் பெற்ற ராச்சா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
டிரோன் மூலம் எடுக்கப்பட்ட நிலச்சரிவு தொடர்பான வீடியோவில், அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள், குப்பைகள் சரிந்து விழுந்திருப்பது தெரிய வருகிறது. சிலரை காணவில்லை என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜார்ஜியாவின் பிரதமர் இராக்லி கரிபாஷ்விலி கூறியுள்ளார்.