< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈரானில் பழுது ஏற்பட்டு திடீரென கழன்று விழுந்த ராட்டினம் - 11 பேர் படுகாயம்
|1 July 2023 1:03 AM IST
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராட்டினம் திடீரென பழுது ஏற்பட்டு கழன்று விழுந்தது.
டெக்ரான்,
வடக்கு ஈரானின் கஸ்வின் நகரில் டல்பாக் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. விடுமுறையை கொண்டாடுவதற்காக இங்கு ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்திருந்தனர். அப்போது சிலர் அங்குள்ள ராட்டினத்தில் ஏறி சுற்றி கொண்டிருந்தனர்.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராட்டினம் திடீரென பழுது ஏற்பட்டு கழன்று விழுந்தது. இதனால் ராட்டினத்தில் அமர்ந்திருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 6 சிறுவர்கள் உள்பட 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.