துனீசியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 108 பேர் மீட்பு
|துனீசியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 108 பேர் மீட்கப்பட்டனர்.
துனிஸ்,
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். இந்த சட்ட விரோத குடியேற்றத்துக்கு மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள துனீசியா போக்குவரத்து புள்ளியாக உள்ளது. இதனை தடுப்பதற்கு துனீசிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் துனீசியாவின் ஸ்பாக்ஸ் மாகாண கடற்கரையில் சட்ட விரோதமாக பலர் தங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் துனீசிய கடற்படை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக குடியேறிய 108 பேரை மீட்டனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் அதிபர் கைஸ் சையத் கூறுகையில், `தன்னிடம் அடைக்கலம் தேடுபவர்களுக்கு துனீசியா புகலிடம் அளிக்கிறது. ஆனால் சட்ட விரோதமாக குடியேறுவதையோ, போக்குவரத்து பாதையாக பயன்படுத்துவதையோ அனுமதிக்காது' என தெரிவித்தார்.