< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பெர்லினில் கார் மோதி ஒருவர் பலி - 12-க்கும் மேற்பட்டோர் காயம்
|9 Jun 2022 1:37 AM IST
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பெர்லின்,
ஜெர்மனி, பெர்லினின் சார்லட்டன்பர்க் பகுதியில் நேற்று மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் திலோ கேப்லிட்ஸ் கூறும்போது, மக்கள் கூட்டத்தின் மீது மோதிய கார், தொடர்ந்து ஒரு கடையின் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார்.
படுகாயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். முதலில் 30 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.