< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்கா: கலிபோர்னியாவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 8 பேர் காயம்
|22 May 2022 5:21 AM IST
தெற்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
கலிபோர்னியா,
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். விருந்து நிகழ்வின் போது,நெரிசலான அறையில் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.