< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய சூறாவளி - ஒருவர் பலி
|6 Nov 2022 12:36 AM IST
அமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லஹோமா மாகாணங்களை தாக்கிய சூறாவளிக்கு ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெக்சாஸ்,
அமெரிக்காவின் வடகிழக்கு டெக்சாஸ் மற்றும் தென்கிழக்கு ஓக்லஹோமா மாகாணங்களை நேற்று முன்தினம் சூறாவளி தாக்கியது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 20-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். டஜன் கணக்கான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப்பணியினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 7,000 பேர் கொண்ட நகரத்தில் நிறைய சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அவசர மேலாண்மைத் துறை செய்தித் தொடர்பாளர் கெலி கெய்ன் கூறினார்.