< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் அருகே கடலில் கப்பல் கவிழ்ந்து ஒருவர் பலி; 3 பேர் மாயம்
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் அருகே கடலில் கப்பல் கவிழ்ந்து ஒருவர் பலி; 3 பேர் மாயம்

தினத்தந்தி
|
30 April 2023 2:19 AM IST

பிலிப்பைன்ஸ் அருகே கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் மாயமாகினர்.

மணிலா,

பிலிப்பைன்சில் உள்ள கோரிகிடார் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் நேற்று முன்தினம் 2 வெளிநாட்டு கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென இந்த இரு கப்பல்களும் நேருக்கு நேர் மோதின. இதில் 20 பேருடன் சென்ற சிறிய கப்பல் கடலில் கவிழ்ந்தது.

இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். எனினும் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்