புதுக்கோட்டை
சுதர்சன் பொறியியல் கல்லூரியில்மண்டல அளவிலான கால்பந்து போட்டி
|சுதர்சன் பொறியியல் கல்லூரியில்மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை சத்தியமங்கலத்தில் உள்ள சுதர்சன் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 13-வது மண்டல அளவிலான கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. திருச்சி அண்ணா பல்கலைக்கழக டீன் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் ஸ்ரீநிவாஸன் வரவேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலைக்கழகத்தை சார்ந்த பல்வேறு கல்லூரியை சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்றனர். இதில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அணி முதல் பரிசையும், ஜே.ஜே. பொறியியல் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது. மாணவர்களை வாழ்த்தி சுதர்சன் கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார். எந்திரவியல் உதவி பேராசிரியர் மற்றும் கல்லூரியின் விளையாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் மற்றும் சுகுமார் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களையும் கலந்து கொண்டவர்களையும் சுதர்சன் கல்வி நிறுவனத்தின் தாளாளர் விஜயகுமார் பாராட்டினார்.