< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டி:ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அணி வெற்றி
|19 Aug 2023 12:15 AM IST
தூத்துக்குடி மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் தூத்துக்குடி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிக்கூட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் பெண்கள் பிரிவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியாளர் பாலசிங் ஆகியோருக்கு ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியைகள் சோபியா, சுஜி ஆகியோர் பாராட்டினர்.