< Back
மாநில செய்திகள்
அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய யூடியூபருக்கு ரூ.1,000 அபராதம்
நீலகிரி
மாநில செய்திகள்

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய யூடியூபருக்கு ரூ.1,000 அபராதம்

தினத்தந்தி
|
17 Jun 2023 2:15 AM IST

ஊட்டியில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய யூடியூபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், ஊட்டியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டிய படி வாலிபர் ஒருவர் அதிவேகமாக சென்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் கோவையை சேர்ந்த யூ டியூபர் வாசன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கியதாக ரூ.1,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மீண்டும் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்