< Back
மாநில செய்திகள்
காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் பதுக்கிய வாலிபர்கள் - வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி...!
மாநில செய்திகள்

காட்டெருமையை வேட்டையாடி வீட்டில் பதுக்கிய வாலிபர்கள் - வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி...!

தினத்தந்தி
|
24 Aug 2022 10:45 AM IST

செங்கம் அருகே காட்டெருமையை வேட்டையாடி அதன் கறியை வீட்டில் காய வைத்திருந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வலசை இந்திராநகர் பகுதியை சேர்ந்த ராயர், ஜெயபாலன் என்ற இரண்டு நபர்கள் வலசை மலைப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டு எருமையை வேட்டையாடி அதனை கூறு போட்டு சுமார் 15 கிலோ கறியை அவர்களது வீட்டினில் காய வைத்திருப்பதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து வனசரகர் ராமநாதன் தலைமையில் இந்திரா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் வனத்துறையினர் அதிரடியாக சென்ற சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் காட்டெருமை கறியை, துணி காய வைப்பது போல் காய வைத்திருப்பதை கண்டு வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அதனை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ராயர் மற்றும் ஜெயபாலனை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்