< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
துப்பாக்கியுடன் சுற்றுலா வந்த இளைஞர்கள்: வெளிவந்த பகீர் திட்டம் - நீலகிரியில் பரபரப்பு
|14 Jan 2024 5:21 AM IST
அவர்கள் வந்த காரை கைப்பற்றிய போலீசார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த தேவாலா பகுதிக்கு சுற்றுலா வந்த கேரளா பயணிகளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜிபின், ராதாகிருஷ்ணன், செமீர் ஆகிய 3 பேர் கூடலூருக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் அங்கே தங்கி பறவைகளை வேட்டையாட திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் வந்த காரை கைப்பற்றிய போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.