< Back
மாநில செய்திகள்
மின் கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கு வைத்த வாலிபர்கள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மின் கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கு வைத்த வாலிபர்கள்

தினத்தந்தி
|
19 Nov 2022 1:23 AM IST

மின் கம்பத்தில் வாலிபர்கள் மண்எண்ணெய் விளக்கு வைத்தனர்.

கீரமங்கலம்:

கீரமங்கலம் அருகே செரியலூர் இனாம் ஊராட்சியில் 7-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி வாலிபர்கள் நேற்று இரவு தெருவிளக்கு மின் கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கு வைத்துள்ளனர். இதன் பிறகாவது தெருவிளக்குகளை சரி செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்