< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கையின் தோழிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் - போக்சோவில் கைது
|27 April 2024 9:35 AM IST
மதுரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரை திருமங்கலம் அருகே கரிசல்பட்டியைச் சேர்ந்த அழகுபாண்டி என்ற இளைஞர், பள்ளியில் படிக்கும் தனது சகோதரியின் தோழிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.
இருப்பினும், தொடர்ந்து அவருக்கு அழகுபாண்டி செல்போனிலும், நேரில் சென்றும் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரை கைது செய்தனர்.