< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் சிறையில் அடைப்பு
|12 Sept 2023 12:36 AM IST
கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர், 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தாய் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசையும், மாணவியையும் மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் விக்னேசை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.