< Back
மாநில செய்திகள்
துணிவு படம் பார்த்து பட்ட பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி இளைஞர் கைது
மாநில செய்திகள்

"துணிவு" படம் பார்த்து பட்ட பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி "இளைஞர் கைது"

தினத்தந்தி
|
24 Jan 2023 11:46 AM IST

திண்டுக்கல்லில் பட்ட பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பட்ட பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. வங்கி ஊழியர்களில் ஒருவர் தப்பி வெளியே வந்து சத்தம் போட்டதால் உள்ளே நுழைந்து கொள்ளையனை பொதுமக்கள் பிடித்தனர்.

பின்பு கொள்ளையனை சரமாரியாக தாக்கி போலீசிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

விசாரணையில் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அணில் ரகுமான் என்பது தெரியவந்துள்ளது

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், "துணிவு" உள்ளிட்ட திரைப்படங்களை பார்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்