< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
|16 Oct 2023 12:00 AM IST
அரியலூரில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
முன்னாள் இந்திய குடியரசு தலைவர், பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.