< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
இளைஞர் எழுச்சி விழிப்புணர்வு ஊர்வலம்
|26 Oct 2023 1:21 AM IST
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
மேலத்தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், மது, புகையிலை போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி இளைஞர் எழுச்சி விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலம் பஸ் நிறுத்தம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லதாகுமார், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.