< Back
மாநில செய்திகள்
வாலிபர், விஷம் குடித்து தற்கொலை
திருவாரூர்
மாநில செய்திகள்

வாலிபர், விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
21 Nov 2022 7:00 PM GMT

திருவாரூரில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தாக்கியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி;

திருவாரூரில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தாக்கியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணைக்கு சென்றவர் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மாதா. இவர்களின் மகன் ராகுல்ராஜ்(வயது 22). நேற்று முன்தினம் ராகுல்ராஜை ஒரு வழக்கு தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.விசாரணை முடிந்து வீட்டுக்கு சென்ற ராகுல்ராஜ் தனது வீட்டில் களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிா்ச்சி அடைந்த ராகுல்ராஜின் குடும்பத்தினர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல்ராஜ் நேற்று மதியம் உயிரிழந்தார்.

போராட்டம்

இதைத்தொடர்ந்து ராகுல்ராஜின் உறவினர்கள், 100-க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ராகுல்ராஜை போலீசார் தாக்கியதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறினர்.இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் மற்றும் போலீசார் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை அருகில் உள்ள திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

உடலை வாங்க மறுத்து விட்டனர்

தாலுகா போலீஸ் நிலையத்தில் ராகுல்ராஜின் தந்தை ராஜா புகார் மனு அளித்தார். அதில், போலீசார் தாக்கியதால் அவமானம் தாங்காமல் எனது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது தகுந்த நடவடிக்்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்தால்தான் ராகுல்ராஜின் உடலை வாங்குவோம் என கூறி உடலை பெற்றுக்கொள்ளாமல் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் செய்திகள்