< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
5 Jan 2023 2:03 AM IST

விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் வாங்கி வராததால் குளிர்பானத்தில் எலிமருந்து கலந்து குடித்து வீடியோவை வெளியிட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்;

விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் வாங்கி வராததால் குளிர்பானத்தில் எலிமருந்து கலந்து குடித்து வீடியோவை வெளியிட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி ஆவார். இவருடைய மகன் நந்தகுமார் (வயது22). 8-ம் வகுப்பு வரை படித்து இருந்த இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், தனக்கு விலை உயர்ந்த கே.டி.எம்., மோட்டார்சைக்கிள் வேண்டும் எனவும், அதற்காக 1.5 லட்சம் ரூபாய பணம் வேண்டும் என தந்தையிடம், நந்தகுமார் கேட்டுள்ளார். ஆனால், இவ்வளவு விலை கொடுத்து மோட்டார்சைக்கிள் இப்போது வாங்க முடியாது, அப்புறம் வாங்கி தருகிறேன் என நந்தகுமாரிடம், கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

குளிர்பானத்தில் எலிமருந்து

இதனால் விரக்தியடைந்த நந்தகுமார், கடந்த மாதம் 29-ந்தேதி தேதி, தஞ்சையில் உள்ள கல்லணைக்கால்வாய் நடைபாதையில் எலி பேஸ்ட்டை குளிர்பானத்தில் கலந்து குடித்தார். மேலும் அவர் விஷம் குடித்ததை செல்பி வீடியோவாக பதிவு செய்து, நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த நண்பர்கள் சிலர், கல்லணை கால்வாய் பகுதிக்கு வந்து, மயக்க நிலையில் இருந்த நந்தகுமாரை மீட்டு, தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்