< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
திருவாரூர்
மாநில செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
22 Nov 2022 12:45 AM IST

திருவாரூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

கொரடாச்சேரி;

திருவாரூர் தாலுகா கல்யாணமகாதேவி அருகே கட்டளை அன்னவாசல் பொற்றடி மாரியம்மன் கோவில் தெருவினைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கணேஷ்பாபு(வயது 22). இவர் சமீபகாலமாக வேலை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேஷ்பாபு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ்பாபு உயிரிழந்தார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்