< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|19 July 2022 2:16 AM IST
தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூரில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வல்லம்;
தஞ்சை அருகே உள்ள கள்ளப்பெரம்பூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் கவுதம்(வயது26). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுதம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்தார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.