< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு
|11 Aug 2024 2:19 PM IST
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த வெள்ளையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, சிறுமலை வேளாம்பண்ணையை சேர்ந்தவர் சவேரியார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முத்திய நிலையில் ஆத்திரமடைந்த சவேரியார், தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டார். இதில் வெள்ளயனுக்கு கழுத்து, தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு பாய்ந்தது.
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த வெள்ளையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தலைமறைவான சவேரியார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.