மயிலாடுதுறை
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
|கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமம் மீராசாகிப் தெருவை சேர்ந்தவர் துரை மகன் ஹரிஷ் (வயது 20). இவர் நேற்று அருகில் உள்ள ஓலை கொட்டாய்மேடு பகுதியில் சிலம்பரசன் என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டிருந்தார். மதியம் 3 மணி அளவில் இறால் குட்டையில் இருந்து மேலே ஏறிய ஹரிஷ் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தை பிடித்த போது எதிர்பாராதவிதமாக ஹரிஷ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து சக தொழிலாளர்கள் ஹரிசை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஹரிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் ஹரிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.